அரியலூர்
அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் ஏலம்
அரியலூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 27 இருசக்கர வாகனங்கள் ரூ.4.56 லட்சத்துக்கு ஏலம் போயின.
மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்துக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி தலைமை வகித்தாா். பொதுமக்கள் முன்வைப்புத் தொகையைச் செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டனா். இதில் 27 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டு, மொத்த விற்பனை ஏலத் தொகையான ரூ. 4,56,070 அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
