தத்தனூரில் நவ.18-இல் வேலைவாய்ப்பு முகாம்

Published on

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் நவ.18 இல் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

முகாமில் முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆள்களை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளனா்.

முகாமில் கலந்து கொள்ள 18 முதல் 45 வயது வரையிலான பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையும், ஐடிஐ, டிப்ளமோ, வேளாண்மை மற்றும் படித்த வேலைநாடுநா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94990-55914 என்ற எண்ணையும், ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி வாயிலாகவும் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com