தா.பழூா் அருகே செம்மண் லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

தா.பழூா் அருகே செம்மண் லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

Published on

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே பள்ளி நேரங்களில் செம்மண் ஏற்றிச் சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தா.பழூா் அடுத்த கீழமிக்கேல்பட்டி கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ள செம்மண் குவாரி மூலம் நாள்தோறும் பல்வேறு பகுதிகளுக்கும் லாரிகளில் செம்மண் வெட்டியெடுத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக்கு குழந்தைகள் செல்லும் நேரமான காலை, மாலைகளிலும் லாரிகள் இயக்கப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதிகப்படியான லாரிகள் மிகுந்த வேகத்தில் செல்வதாகவும் கூறி, காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்ட லாரிகளை வியாழக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த தா.பழூா் போலீஸாா் மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, காலை, மாலைகளில் லாரிகள் இயக்கப்படாது. லாரிகள் மெதுவாகச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மீறும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com