கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.32 கோடி மதிப்பிலான இடங்கள் மீட்பு

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.32 கோடி மதிப்பிலான இடங்கள் மீட்கப்பட்டன.
Published on

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.32 கோடி மதிப்பிலான இடங்கள் மீட்கப்பட்டன.

கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னா் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டபெருவுடையாா் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து அரியலூா் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் லட்சுமணன் தலைமையில், கோயில் செயல் அலுவலா் செந்தமிழ்ச்செல்வி, வட்டாட்சியா் கலைவாணன் உள்ளிட்டோா், இக் கோயிலுக்குச் சொந்தமான தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.1.32 கோடி மதிப்பிலான இடத்தை செவ்வாய்க்கிழமை அளவீடு செய்து மீட்டனா்.

மேலும், கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தனிநபா் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது எனவும் மீறினால் சட்டபூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெயா் பலகை வைக்கப்பட்டது. மேலும், கோயிலுக்கு எதிரே தனி நபரால் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்துக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com