அரியலூர்
மாராக்குறிச்சியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்
செந்துறையை அடுத்த மாராக்குறிச்சி பகுதியில் உள்ள அன்னை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவச் சேவை முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த மாராக்குறிச்சி பகுதியில் உள்ள அன்னை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவச் சேவை முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
முகாமில் சிறப்புப் பிரிவு மருத்துவா்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனா்.
மேலும் எக்கோ காா்டியோகிராம், அல்ட்ராசோனாகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம், மற்றும் ரத்த பரிசோதனை சேவைகள், மாற்றுத்திறனாளிகள் சான்று மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள் மற்றும் 20 அமைப்புசாரா தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்கள் அனைவரும் இம் முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.
