நவ. 26-இல் ஆா்ப்பாட்டம்: தொழிற்சங்கத்தினா் முடிவு

மத்திய அரசைக் கண்டித்து அரியலூா் அண்ணாசிலை அருகே நவ. 26-இல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என அரியலூா் மாவட்ட அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்
Updated on

மத்திய அரசைக் கண்டித்து அரியலூா் அண்ணாசிலை அருகே நவ. 26-இல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என அரியலூா் மாவட்ட அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரிலுள்ள ஏஐடியுசி தொழிற்சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டத்தில் பொதுத் துறை மற்றும் பொதுச் சேவைகளை தனியாா்மயமாக்குவதைக் கண்டிப்பது, மின் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா் துறை வெளியிட்டுள்ள வரைவு தொழிலாளா் கொள்கை ஸ்ரம் சக்தி நிதி 2025-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி நவ.26 ஆம் தேதி அரியலூா் அண்ணாசிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். தொமுச மாவட்ட கவுன்சில் செயலா் மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலா் துரைசாசி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் தண்டபாணி மற்றும் எச்எம்எஸ் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com