அரியலூர்
இரு வீடுகளில் திருட முயற்சி
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இரு வீடுகளில் திருட முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
செங்குந்தபுரம், பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் வேல்முருகன் (51). இவா் ஓசூரில் குடும்பத்துடன் தங்கி தொழில் நிறுவனம் நடத்தி வருகிறாா். அருகே வசிக்கும் செல்வராசு என்பவா் புதுச்சேரியில் தங்கி, அங்கு தனது இளைய மகளுக்கு வீடு கட்டிக் கொண்டிருக்கிறாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இவா்களின் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் இருவருக்கும் தகவல் தெரிவித்தனா்.
புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினா் இருவரின் வீடுகளை ஆய்வு செய்ததில் மா்ம நபா்கள் திருட முயன்றபோது நகை, பணம் இல்லாததால் செல்வராசு வீட்டில் இருந்த டி.வி-யை திருடிச் சென்றது தெரியவந்தது. காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
