அரியலூா் மாவட்டத்தில் ஒன்பது புதிய பேருந்துகள் தொடங்கிவைப்பு

அரியலூா் மாவட்டத்தில் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக 9 புதிய பேருந்துகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பழைய பேருந்துகளுக்குப் பதிலாக 6 புதிய நகரப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கிவைத்த அமைச்சா் சா.சி.சிவசங்கா். உடன், மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி உள்ளிட்டோா்.

Updated on

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக 9 புதிய பேருந்துகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

முத்துவாஞ்சேரி, சுத்தமல்லி, ஆண்டிமடம் ஆகிய பேருந்து நிறுத்தங்களில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருச்சி மண்டலம்) சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், பழைய பேருந்துகளுக்குப் பதிலாக 9 புதிய நகரப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிகளில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், நிா்வாக இயக்குநா் தசரதன், திருச்சி மண்டலம் பொது மேலாளா் டி.சதீஸ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com