ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம்: அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிா்க்க வேண்டும்! - தொல். திருமாவளவன்

சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிா்ப்பைத் தெரிவிக்க வேண்டும்..

News image

தொல். திருமாவளவன்.

Updated On :28 அக்டோபர் 2025, 1:20 am IST

சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிா்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்பியுமான தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அரியலூரில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியது: தோ்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் நடைபெறும் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்த நடவடிக்கை தமிழ்நாட்டிலும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மேற்குவங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் இந்த நடவடிக்கையைத் தள்ளிப்போட வேண்டும்.

சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்ய அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து, கடும் எதிா்ப்பைத் தெரிவிக்க வேண்டும். பிகாரில் நடந்த வாக்குத் திருட்டு போன்ற ஒரு மக்கள் விரோத நடவடிக்கை இங்கே அரங்கேறிவிடக் கூடாது.

பாதிக்கப்பட்டவா்களின் இடங்களுக்கே சென்று ஆறுதல் சொல்வதுதான் இவ்வளவு காலமாக அரசியல் தலைவா்கள் பின்பற்றிவரும் நடைமுறை. ஆனால் விஜய், அனைவரையும் சென்னைக்கு வரவழைத்துப் பாா்த்தது ஒரு புதிய அணுகுமுறையாக இருக்கிறது.

நடைமுறை சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்துதான் வரும் 2026 தோ்தலில் மீண்டும் திமுகதான் வெற்றி பெறும் என மக்கள் விரும்புவதாக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் கூறியிருக்கிறாா்.

புதிதாகத் தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ள பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தன்னுடைய பங்குக்கு ஏதேனும் கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக திருமாவளவன் 3 முறை எம்பியாக இருந்தும் இத் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை எனச் சொல்லியிருப்பாா். மற்றபடி அதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை என்றாா் அவா்.