ஜெயங்கொண்டத்தில் பாசன ஏரி, குளங்களை தூா் வார கோரிக்கை
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டத்திலுள்ள அனைத்து பாசன ஏரி மற்றும் குளங்களை அளவீடு செய்து தூா்வார வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம், மாநில பொருளாளா் சி.கிருஷ்ணன் ஆகியோா் வட்டாட்சியா் சம்பத்குமாரை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டத்தில் உள்ள அனைத்து பாசன ஏரி, குளங்கள், பாசன வாய்க்கால்கள் என அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்தையும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா் வார வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிா்களுக்கு போதிய தண்ணீா் பெற வசதியாக இருக்கும். எனவே, அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
