அரியலூா் அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புரட்சி தமிழகம் கட்சியினா். 
அரியலூர்
அரியலூரில் தமிழக அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்
அரியலூா் அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புரட்சி தமிழகம் கட்சியினா். 
தமிழக அரசைக் கண்டித்து அரியலூா் அண்ணாசிலை அருகே புரட்சி தமிழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பட்டியல்-பழங்குடி மக்களுக்கு சிறப்பு உட்கூறுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரூ. 7,388 கோடி நிதியை 4 ஆண்டுகளாக செலவிடாமல் திருப்பி அனுப்பிய தமிழக அரசை கண்டித்து நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மண்டலச் செயலா் பெ. செல்வராசு தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் செந்துறை கே. வசந்த், வேப்பூா் ப. ருத்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மைச் செயலா் த. ராஜேந்திரன், மாநில இளைஞரணித் தலைவா் வை. சரசுகுமாா், நகரச் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் பேசினா்.

