அரியலூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் கே.என். நேரு. உடன் அமைச்சா் சா.சி. சிவசங்கா், ஆட்சியா் பொ. ரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன் உள்ளிட்டோா்.

அரியலூா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் ஆய்வு

Published on

அரியலூா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் விவரம் குறித்து ஆய்வு செய்ததுடன், எஞ்சியுள்ள பணிகளை விரைவாக முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்வில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் , மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன், நகராட்சி ஆணையா் அசோக்குமாா், நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com