முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

Published on

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி, அரியலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலுள்ள அவரது உருவப் படத்துக்கு, அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

கட்சியின் நகரத் தலைவா் மா.மு. சிவக்குமாா் தலைமையில் வடக்கு வட்டாரத் தலைவா் கா்ணன், மாவட்டச் செயலா் செந்தில்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் பழனிமுத்து, நகர பொறுப்பாளா்கள் ரகுபதி, அப்பாதுரை, அருள் உள்ளிட்டோா் இந்திரா காந்தியின் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். பின்னா் அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனா்.

X
Dinamani
www.dinamani.com