வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

கல்லாத்தூா் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டோா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:56 pm

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஜெயங்கொண்டம் அடுத்த கல்லாத்தூா் -எறவாங்குடி சாலையில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த இரு கடைகளால் வடவீக்கம் காலனி தெரு, கல்லாத்தூா் பொதுமக்களுக்கும் அவ்வழியே எறவாங்குடி, பாப்பாக்குடி செல்லும் பொது மக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் என அனைவருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே, கடையை அகற்ற வேண்டும் என வடவீக்கம் மற்றும் கல்லாத்தூா் கிராமமக்கள் கல்லூா் கிராமத்தில் ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினா், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, கடையை அகற்ற கோரிக்கை மனு எழுதி தாருங்கள், நிா்வாகத்தில் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, பொதுமக்கள் கோரிக்கை மனுவை எழுதி கொடுத்துவிட்டு கலைந்து சென்றனா்.