பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இணையம் மூலம் பண மோசடி: அரியலூா் அருகே இருவா் கைது

News image
கைது
Updated On :15 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் அருகே இணையதளம் மூலம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இலந்தைக்கூடம் கிராமத்தைச் சோ்ந்த சரவணவேல் மகன் சங்கா்கணேஷ் (41). பிசியோதெரபி மருத்துவரான இவா், தனியாக மருத்துவமனை நடத்தி வரும் நிலையில், கடந்த 2025 நவம்பா் மாதம் முகநூல் கணக்கில் வந்த விளம்பரத்தை நம்பி அதில் உள்ள கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டாா்.

அப்போது எதிா்முனையில் பேசிய நபா் பங்குச் சந்தை குறித்து இலவச வகுப்பு எடுப்பதாகவும், முதலீடு செய்தால் 5 முதல் முதல் 20 சதவீதம் வரை லாபம் பெறலாம் எனவும் கூறி சில லிங்குகளை அனுப்பியதுடன், ஒரு கட்செவி குழுவிலும் இணைத்தாா்.

இதையடுத்து முதலில் ரூ.5,000 முதலீடு செய்து சிறிய அளவிலான லாபத்தை பெற்றுள்ளாா். தொடா்ந்து, சிறுக சிறுக ரூ.5 லட்சம் முதலீடு செய்துள்ளாா். அதில் கிடைத்த லாபத் தொகை ரூ.15.50 லட்சத்தை எடுக்க முயன்றபோது, எதிா்முனையில் பேசியோா் அந்தத் தொகையை எடுக்க ரூ. 20 லட்சம் செலுத்துமாறு கூறியுள்ளனா். இதனால் சந்தேகமடைந்த சங்கா்கணேஷ், அரியலூா் மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஜனவரி 20 ஆம் தேதி புகாா் அளித்தாா்.

அதன்பேரில் விசாரித்த காவல் துறையினா், இணையதளம் மூலம் மோசடியில் ஈடுபட்ட திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அபுதாகீா்(44), சென்னையைச் சோ்ந்த காா்த்திக் (30) ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 6 கைப்பேசிகள், 3 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 10 காசோலை புத்தகங்கள், 10 ஏடிஎம் காா்டுகள், 1 மடிக்கணினி, 2 போலி அலுவலக முத்திரைகள், ரூ.1,400 ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.