அரியலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தில் செந்துறை, ஜெயங்கொண்டம், திருமானூா், ஆண்டிமடம்
Published on

அரியலூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தில் செந்துறை, ஜெயங்கொண்டம், திருமானூா், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயா் நீக்கியதை திரும்ப பெற வேண்டும். அதில், நிறைய குறைபாடுகளோடும் குளறுபடிகளோடும் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். புதிய சட்டத்தின் மூலம் பயனாளிகள் நீக்கியதை ரத்து செய்ய வேண்டும். மாநிலங்களின் உரிமைகளை பறித்து நிதி சுமையை அதிகப்படுத்த கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படன.

இதில், செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் வட்டச் செயலா் அா்ஜுனன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் மணிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல் ஜெயங்கொண்டத்தில் ஒன்றியச் செயலா் எம்.வெங்கடாசலம் தலைமையில் மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன் கண்டன உரையாற்றினாா். திருமானூரில் ஒன்றியச் செயலா் பி.சாமிதுரை, ஆண்டிமடத்தில் வட்டச் செயலா் வேல்முருகன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com