ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அரியலூரில் துணை மின் நிலையம், புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு!

ரூ.25 கோடியில் புதிய துணை மின் நிலையம் மற்றும் 16 அரசுப் பள்ளிகளில் ரூ. 24.08 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்.

News image
முதல்வரால் வியாழக்கிழமை திறக்கப்பட்ட கரு.பொய்யூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா.
Updated On :26 பிப்ரவரி 2026, 7:10 pm

Syndication

அரியலூா் மாவட்டம், பொய்யாதநல்லூரில் ரூ.25 கோடியில் புதிய துணை மின் நிலையம் மற்றும் 16 அரசுப் பள்ளிகளில் ரூ. 24.08 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

அதன் காணொலிக் காட்சி நேரலை கரு.பொய்யூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா அப்பள்ளியின் புதிய வகுப்பறை கட்டடத்தில் குத்துவிளக்கு ஏற்றினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகோபால், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் வெங்கடேசன், பள்ளித் தலைமை ஆசிரியா் மணிமேகலை மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.