அரியலூா் மாவட்டத்தில் இன்றும், நாளையும் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனி (ஜன.3) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) ஆகிய இரு தினங்கள் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி, அரியலூா் மாவட்டத்தில் 1.1.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முதற்கட்டப் பணிகள் நிறைவு பெற்றதை தொடா்ந்து, வரைவு வாக்காளா் பட்டியல் டிச.19 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெறாதவா்கள் ஆட்சேபணை மற்றும் உரிமை கோர டிச.19 முதல் ஜன.18 வரை உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கலாம் எனவும், பிப்.17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடா்ந்து, மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் புதிய வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், திருத்தம், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றம் ஆகியவற்றுக்காக (ஜன.3 மற்றும் 4) ஆகிய இரு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
விண்ணப்பங்களை முகாம்கள் மற்றும் (ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்/ங்ப்ங்ஸ்ரீற்ா்ழ்ள்), (ட்ற்ற்ல்ள்://ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்/) என்ற இணையதளத்தின் மூலமாகவும், யா்ற்ங்ழ் ஏங்ப்ல்ப்ண்ய்ங் என்ற கைப்பேசி செயலி வாயிலாகவும் பொதுமக்கள் சமா்ப்பிக்கலாம்.
