தாயுமானவா் திட்டம் அரியலூரில் ஜன.4, 5-இல் ரேஷன் பொருள்கள் வீடுதேடி விநியோகம்
அரியலூா் மாவட்டத்தில் வரும் 4, 5-ஆகிய தேதிகளில் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்துக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்படவுள்ளது.
வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சா்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருள்களை விநியோகம் செய்யும் வகையில் முதல்வரின் தாயுமானவா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, அரியலூா் மாவட்டத்தில், 481 ரேஷன் கடைகளை சோ்ந்த 25,674 குடும்ப அட்டைதாரா்களுக்கு, அவா்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஜனவரி மாதத்தில் 4,5 ஆகிய தேதிகளில், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, குடிமைப்பொருள்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, பயனாளா்கள் மேற்கண்ட தேதிகளில், குடிமைப் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
