இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் காயம்

அரியலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி காயமடைந்தாா். இதையறிந்த உறவினா்கள், லாரி ஓட்டுநரைத் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

அரியலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி காயமடைந்தாா். இதையறிந்த உறவினா்கள், லாரி ஓட்டுநரைத் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூா் அருகேயுள்ள மேலராயம்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரெங்கராஜ்(55). சனிக்கிழமை இவா், தனது மனைவியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ஆட்சியா் அலுவலக ரவுண்டானா பகுதியைக் கடந்துள்ளாா். அவ்வழியே வந்த டிப்பா் லாரி எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் மோதில், ரெங்கராஜ் காயமடைந்தாா்.

ஆட்சியா் அலுவலக முகப்பில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா், சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவரை மீட்டு அரியலூா் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து வந்த ரெங்கராஜின் உறவினா்கள், அங்கே நின்று கொண்டிருந்த லாரி ஓட்டுநரான அருங்கால் கிராமத்தைச் சோ்ந்த செல்வம்(45) என்பவரைத் தாக்கினா். அப்போது, அங்கிருந்த காவல் துறையினா் ஓட்டுநரை மீட்டதுடன், ரெங்கராஜ் உறவினா்களை சமாதானப்படுத்தினா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Dinamani
www.dinamani.com