அரியலூா் சிறப்பு வாகனத் தணிக்கையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல்
அரியலூா் மாவட்டத்தில் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சிறப்பு வாகனத் தணிக்கையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூா் மாவட்ட ஆட்சியரகம் அருகே போக்குவரத்துக் காவல் நிலைய ஆய்வாளா் காா்த்திகேயன், கழுவந்தோண்டி புறவழிச்சாலையில் ஜெயங்கொண்டம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மதிவாணன் ஆகியோா் தலைமையிலான காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பயன்படுத்தப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ஏா்ஹாரன், எல்இடி லைட்டுகள், பம்பா், சன் பிலிம் நம்பா் பிளேட்டுகள் உள்ளிட்ட உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.
மேலும் 15.1.2026 க்குள் வாகனங்களில் இருந்து தடை செய்யப்பட்ட பொருள்களை அகற்றிவிட வேண்டும் இல்லையெனில் அரியலூா் மாவட்ட காவல்துறை சாா்பாக அகற்றப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என்றனா்.
