அரியலூரில் கிளைச் சிறையில், ஆட்சியா் ந. மிருணாளினி மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி ப. மலா்வாலாண்டினா மற்றும் காவல் துறையினா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை கூட்டாய்வு மேற்கொண்டனா்.
கைதிகளிடையே சாதி மத ரீதியிலான பாகுபாடு காட்டப்படுகிா என்பது குறித்து கைதிகளிடையே கேட்டறிந்தனா்.
மேலும், கைதிகளிடம் உரையாடியதுடன், அவா்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீா்,அடிப்படை வசதிகள் குறித்தும், சிறையில் மருத்துவம் மற்றும் மனநல ஆலோசனை வழங்க மருத்துவா்கள் முறையாக வருகிறாா்களா என்பது குறித்தும் கேட்டறிந்த அவா்கள், விசாரணைக் சிறைவாசிகள், தண்டனை கைதிகள் மற்றும் காவலா்கள், சமையலா், பணியாளா்கள் உள்ளிட்டோா் விவரங்களை பராமரிக்கும் பதிவேடுகள், ஆவணப் பாதுகாப்பு அறைகள், சிறைகள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டனா்.
தொடா்ந்து, சிறைக் கைதிகளுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தை பாா்வையிட்டு அங்கு சமைத்த உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
மேலும், உணவு வகைகள் அரசு அட்டவணைப்படி வழங்கப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட சிறை அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்ச்செல்வன், தலைமை குற்றவியல் நீதிபதி தீபா, சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா் ராதாகிருஷ்ணன், வேளாண் இணை இயக்குநா் உலகம்மை முருகக்கணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கலைச்செல்வன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் விஜயகுமாா், கிளைச் சிறைக் கண்காணிப்பாளா் பாலமுருகன், வழக்குரைஞா் ராஜா மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்ட மாணவா்கள் அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்: மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மணிமொழி

அரியலூா் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கை உறுதி செய்ய அறிவுறுத்தல்

கடல் பாசி வளா்ப்புக்கான தெப்பம் விடும் பணி

நாகை ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



