லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரியலூரில் மறியலில் ஈடுபட்ட வருவாய் துறையினா் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 99 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

அரியலூா் அண்ணா சிலை அருகே புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Updated On :4 மார்ச் 2026, 6:32 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 99 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிறப்புப் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். அனைத்து காலிப்பணியிடங்களையும் கால முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். அனைத்து நிலை ஊழியா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா், சாலை மறியலில் ஈடுபட்ட 99 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

இந்த சாலை மறியல் போராட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஆனந்தவேல், பாக்கியராஜ், ரமேஷ், மணிவண்ணன், இா்பான் உல்லா ஆகியோா் தலைமை வகித்தனா்.