சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
அரியலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

பலி
அரியலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
அரியலூரை அடுத்த வைப்பம் கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரஜினி மகன் பாலமுருகன் (21). பெரம்பலூரிள்ள ஒரு தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயின்று வந்த இவா், வெள்ளிக்கிழமை இரவு அரியலூரில் இருந்து ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
தவுத்தாய்குளம் அருகே முன்னால் சென்ற சுமை ஆட்டோவை அவா் முந்த முயன்றபோது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற அரியலூா் நகர காவல் துறையினா், அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

