மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

"மதமாற்றம் தொடர்ந்தால் எதிர்காலத்தில் அபாயம் உருவாகும்'

இந்தியாவில் தொடர்ந்து மதமாற்றம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் பெரிய அபாயத்தை உருவாக்கிவிடும் என்றார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத செயற்குழு உறுப்பினர் சூர்யநாராயணராவ்.

Updated On :12 மே 2013, 6:30 am IST

இந்தியாவில் தொடர்ந்து மதமாற்றம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் பெரிய அபாயத்தை உருவாக்கிவிடும் என்றார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத செயற்குழு உறுப்பினர் சூர்யநாராயணராவ்.

கரூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென் தமிழ்நாடு அளவிலான 21 நாள் பண்பு பயிற்சி முகாம் நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது:

விவேகானந்தரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தால், இந்தியாவின் புகழ், கலாசாரம், பண்பாடு, நாகரிகம் வெளிநாடுகளில் வேகமாக பரவியது. இந்தியாவில், கிராமப்புறம் மட்டுமல்லாமல் நகர்ப் புறங்களிலும்கூட மதமாற்றம்  தொடர்ந்து நடைபெறுகிறது.

இது எதிர்காலத்தில் பெரிய அபாயத்தை உருவாக்கி விடும் என்றார்.

பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், கரூர் மாவட்டத் தலைவர் கே.  சிவசாமி, ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவர் குணசேகரன், முகாம் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சத்யானந்த மஹாராஜ், ருத்ரானந்த மஹாராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.