நவீன வசதியுடன் விளையாட்டரங்கம்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

மாவட்ட விளையாட்டரங்கை உடற்பயிற்சி மையம்(ஜிம்), விடுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்துவது குறித்து தனியார் நிறுவன தொழிலதிபர்களுடனான
Updated on
1 min read

மாவட்ட விளையாட்டரங்கை உடற்பயிற்சி மையம்(ஜிம்), விடுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்துவது குறித்து தனியார் நிறுவன தொழிலதிபர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியர்(பொ) ச.சூர்யபிரகாஷ் தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக முதல்வர் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு பரிசுகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இளைஞர்களுக்கு வழிகாட்டவும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும் விளையாட்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒவ்வொருவரிடமும் உள்ள தனித்திறமை என்னவென்று கண்டுகொண்டு அவர்களுக்கு சரியான முறையில் வயதுக்கு ஏற்றாற்போல் பயிற்சி அளித்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறச்செய்ய வேண்டும். ஆர்வமுள்ள அனைவரையும் ஊக்கப்படுத்தி பயிற்சியளிக்க வேண்டும்.
அதனடிப்படையில், நவீன வசதிகளுடன் கூடிய (ஜிம்) உடற்பயிற்சி மையம் அமைத்தல், நீச்சல் குளம் அமைத்தல், விளையாட்டு அரங்கத்தை சுற்றிலும் மின் விளக்குகள் அமைத்தல்,
குடிநீர் வசதி ஏற்படுத்திதருதல், வாகனங்கள் நிறுத்துமிடம்,நடைப்பயிற்சிக்கான நடைபாதை அமைத்தல், அனைத்து வசதிகளுடன் கூடிய உள் விளையாட்டரங்கம் அமைத்தல் மற்றும் விளையாட்டு விடுதி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கு உங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அய்யண்னன், மாவட்ட வன அலுவலக அலுவலர்கள், புகழூர் காகிதஆலை நிர்வாகிகள், மாவட்ட கையுந்து கழக, தடகள நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com