இறந்த பெண் காவலரின் வாரிசுதாரருக்கு உதவித்தொகை

இறந்த பெண் காவலரின் வாரிசுக்கு உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.இராஜசேகரன் புதன்கிழமை வழங்கினார்.
Updated on
1 min read

இறந்த பெண் காவலரின் வாரிசுக்கு உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.இராஜசேகரன் புதன்கிழமை வழங்கினார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றிய முதல்நிலை காவலர் விஜயசாந்தி கடந்த ஜூலை 9 ஆம் தேதி நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
இதையடுத்து அவரது குழந்தைகள் தேவ தர்ஷன் (4), தேன் மொழி (1) ஆகியோருக்கு கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் தன்னார்வத்துடன் வழங்கிய உதவித்தொகை ரூ.1.30 லட்சத்தை விஜயசாந்தியின் தந்தை பிரபாகரனிடம் புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன் வழங்கினார். நிகழ்ச்சியின்போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அருள்மொழிஅரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com