மின்சாரம் தாக்கி இறந்த திண்டுக்கல் மாவட்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த கரும்புலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (35). இவர், லந்தக்கோட்டையில் உள்ள கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவிற்கு அலங்கார மின்விளக்கு அமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டாராம். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்த பாண்டியனை ஊழியர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாண்டியன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் இழப்பீடு தர வேண்டும் எனக்கூறி கரூர் அரசு மருத்துவமனையின் முன்பு உள்ள பழைய சேலம் புறவழிச்சாலையில் அமர்ந்து மறியல் செய்ய முயன்றனர். அப்போது அங்கு வந்த கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா தலைமையிலான போலீஸாரும், குஜிலியம்பாறை போலீஸாரும் அவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெட்டி மேளம் தொடரின் நிறைவு நாள் படப்பிடிப்பு படங்கள்! இணையத்தில் வைரல்!

புணே இளைஞர் கொலை! கொலையாளியைக் காட்டி கொடுத்த ஹூடி

முதல்வர் விஜய் சைகை: அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்

அமோனியா கசிவில் பலியானதாக அறிவிக்கப்பட்டவர்! ஆந்திரத்தில் உயிருடன்! ஆதார் மோசடி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


