கடல் போல் மாயனூர் கதவணை!

காவிரி ஆற்றில் 1.32 லட்சம் கன அடி நீர் வருவதால் மாயனூர் கதவணை கடல்போலக் காட்சியளிக்கிறது.

காவிரி ஆற்றில் 1.32 லட்சம் கன அடி நீர் வருவதால் மாயனூர் கதவணை கடல்போலக் காட்சியளிக்கிறது.
கர்நாடகாவில் மேற்குத் தொடர்ச்சி மழையில் பலத்த மழை பெய்துவருவதால் அம்மாநிலத்தின்  அனைத்து அணைகளுக்கும் வரும் நீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது. 
மேட்டூர் அணையும் அதன் கொள்ளவை நிகழாண்டில் இரண்டாவது முறையாக எட்டியுள்ளதால் அணையின் பாதுகாப்புக்கருதி அணைக்கு  வரும் நீர் முற்றிலும் அப்படியே அணையில் இருந்து திறக்கப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், மாயனூரில் காவிரி-குண்டாறு நதிகளை இணைக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கதவணையில் தற்போது முக்கால் டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு ஆற்றில் வரும் அனைத்து நீரும் அப்படியே திருச்சி மாவட்டம், முக்கொம்புக்கு திறக்கப்படுகிறது. 
இதுதொடர்பாக மாயனூர் கதவணை உதவிசெயற்பொறியாளர் ஒருவர் கூறியது: மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து மாயனூர் கதவணையில் தண்ணீரை தேக்கி வைத்து திறந்து வருகிறோம். 
தொடர்ந்து நீர்வரத்தை கண்காணித்து வருகிறோம். ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அணை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். மேலும் பொதுமக்கள் ஆற்றில் இறங்காதவாறு எச்சரிக்கை பலகையும் ஆங்காங்கே வைத்துள்ளோம். வருவாய்த் துறையினர் ஏற்கெனவே கரையோரம் உள்ள பகுதிகளில் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com