விதிமீறி மணல் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல்

நெரூர் அருகே உரிய ஆவணமின்றி மணல் ஏற்றி வந்த இரு லாரிகளை கரூர் கோட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
Updated on
1 min read


நெரூர் அருகே உரிய ஆவணமின்றி மணல் ஏற்றி வந்த இரு லாரிகளை கரூர் கோட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
நெரூர் வடபாகம் பகுதியில் கரூர் வருவாய்க் கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு  வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  
அப்போது அந்த வழியே மணல் ஏற்றி வந்த இரு லாரிகள், ஜேசிபி இயந்திரங்களை மடக்கியபோது, அதில் இருந்த ஓட்டுநர்கள் இறங்கி ஓடிவிட்டனர். பின்னர் லாரியை சோதனை செய்தபோது முறையான அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.  உடனடியாக லாரிகளையும், மணல் ஏற்றப் பயன்படுத்தப்பட்ட இரு ஜேசிபி வாகனங்களையும் பறிமுதல் செய்த வருவாய் கோட்டாட்சியர்,  அவற்றை தனது அலுவலகத்திற்கு கொண்டுசெல்ல உத்தரவிட்டார்.  
சனிக்கிழமை காலை காவல் துறையினரிடம் வாகனங்கள் முறையாக ஒப்படைக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com