தொழிலாளியை தாக்கிய இளைஞர் கைது
By DIN | Published On : 01st April 2019 09:03 AM | Last Updated : 01st April 2019 09:03 AM | அ+அ அ- |

கரூர் மாவட்டம் மணவாசியில் குடும்பத் தகராறில் தொழிலாளியைத் தாக்கிய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.
மணவாசி மலையப்ப காலனியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (33). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் கிருபாகரனுக்கும் குடும்பத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த விக்னேஷிடம் கிருபாகரன் மகன் கோபி(19) தகராறு செய்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த கோபி அருகே கிடந்த இரும்புக்கம்பியால் விக்னேசைத் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்கு பதிந்து கோபியைக் கைது செய்தனர்.