11 வகையான புகைப்பட ஆவணங்களில் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்
By DIN | Published On : 17th April 2019 05:30 AM | Last Updated : 17th April 2019 05:30 AM | அ+அ அ- |

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 வகையான புகைப்பட ஆவணங்களில் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான த. அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுத்தேர்தலில் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
அவ்வாறு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை காண்பிக்க இயலாதவர்கள் கீழ்கண்ட 11 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
1. கடவுச் சீட்டு, 2. ஓட்டுநர் உரிமம், 3. மத்திய,மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், 4. வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக அட்டை, 5. நிரந்தர கணக்கு எண் அட்டை, 6. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, 7. வேலை உறுதித் திட்ட பணி அட்டை, 8. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, 9.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், 10. எம்பி,எம்எல்ஏ, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை, 11.ஆதார் அட்டை ஆகிய 11 வகையான புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களைக்காட்டி வாக்களிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு அடையாள ஆவணமாக ஏற்கப்பட மாட்டாது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...