பிரசாரத்தை தொடங்கினார் அதிமுக வேட்பாளர்
By DIN | Published On : 26th April 2019 05:20 AM | Last Updated : 26th April 2019 05:20 AM | அ+அ அ- |

அதிமுக வேட்பாளர் வி. செந்தில்நாதன் வியாழக்கிழமை தனது பிரசாரத்தை தொடங்கினார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடும் வி. செந்தில்நாதன் வியாழக்கிழமை அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சேந்தமங்கலம் மேல்பாகம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்தார். முன்னதாக சேந்தமங்கலம் மேல்பாகம் பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் தரிசனம் செய்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.
பிரசாரத்தின் அரவக்குறிச்சி தொகுதிக்கு காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்.
காவிரி ஆற்றின் குறுக்கே புகழூரில் கதவணை கட்டப்படவுள்ள கதவணை மூலம் அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாடே இல்லாத வகையில் நடவடிக்கை என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், என்.எஸ். கிருஷ்ணன், அரவக்குறிச்சி ஒன்றியச் செயலர் குருசாமி, நகர எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் ஆயில் ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.