மணல் அள்ளிய 4 பேர் கைது
By DIN | Published On : 04th August 2019 03:41 AM | Last Updated : 04th August 2019 03:41 AM | அ+அ அ- |

கிழக்கு தவிட்டுப்பாளையத்தில் காவிரி ஆற்றில் மணல் அள்ளிய 4 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 3 பொக்லைன் இயந்திரங்களைப் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம், கிழக்கு தவிட்டுப்பாளையத்தில் காவிரி ஆற்றுக்குள் பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தி சிலர் செவ்வாய்க்கிழமை இரவு மணல் அள்ளுவதாக வேலாயுதம்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் அள்ளிக்கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த சிலம்பரசன்(31), சீனிவாசன் மகன் சர்வேஷ்(23), கரூர் தோட்டக்குறிச்சியைச் சேர்ந்த ரமேஷ்(40), கிருஷ்ணகிரி மாவட்டம் கொளத்தூரைச் சேர்ந்த ரஞ்சித்(30) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த மூன்று பொக்லைன் இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...