விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
By DIN | Published On : 03rd July 2019 09:12 AM | Last Updated : 03rd July 2019 09:12 AM | அ+அ அ- |

வேலாயுதம்பாளையத்தில் விவசாயி ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்பதரை பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி ஹேமலதா. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் புன்னம்சத்திரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், ராஜ்குமார் மனைவியை அழைத்துவர திங்கள்கிழமை இரவு வீட்டைப் பூட்டிவிட்டு பைக்கில் புன்னம்சத்திரம் சென்றுள்ளார். பின்னர் காலையில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த ஒன்பதரை பவுன் நகை, ரூ.10,000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.