கரூர் தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளர் நியமனம்
By DIN | Published On : 28th March 2019 07:37 AM | Last Updated : 28th March 2019 07:37 AM | அ+அ அ- |

இந்திய தேர்தல் ஆணையத்தால் கரூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக பிரசாத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவரிடம் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விரும்பும் நபர்கள் தொடர்பு கொள்ளலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வரும் மக்களவை பொதுத் தேர்தல் 2019-ஐ முன்னிட்டு கரூர் மக்களவைத் தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பொது பார்வையாளராக பிரசாத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள அவரிடம் தேர்தல் தொடர்பான தொடர்பாக புகார் அளிக்க விரும்பும் நபர்கள் 94895-76177 என்ற அவரது அலைபேசி எண்ணிலோ, நேரிலோ தொடர்பு கொள்ளலாம்.
தேர்தல் பொதுப்பார்வையாளரை நேரில் சந்திக்க விரும்பும் நபர்கள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை அரசு விருந்தினர் மாளிகையில் அறை எண்:1-ல் சந்திக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...