பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது
By DIN | Published On : 05th May 2019 03:31 AM | Last Updated : 05th May 2019 03:31 AM | அ+அ அ- |

கரூரில் கோயில் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரைப் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கரூர் அரசு காலனியில் புற்றுமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பூசாரியாக சேகர் மற்றும் அவரது மகன் பார்வேந்தன் (26) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கோயிலில் பார்வேந்தன் வழிபாடு நடத்திக்கொண்டிருந்தபோது, அங்கு போதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன்கள் சிலம்பரசன், பாண்டியன்(30) ஆகியோர் பார்வேந்தனை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸார் வழக்குப்பதிந்து பாண்டியனைக் கைது செய்தனர். தலைமறைவான சிலம்பரசனைத் தேடி வருகின்றனர்.