மே 13,14-களில்ஆடு வளர்ப்பில் நவீன தொழில்நுட்ப பயிற்சி
By DIN | Published On : 05th May 2019 03:32 AM | Last Updated : 05th May 2019 03:32 AM | அ+அ அ- |

கரூர் பண்டுதகாரன்புதூர் கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் விவசாயிகளுக்கு ஆடு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம் குறித்த பயிற்சி வரும் 13, 14-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் இறைச்சி, பால் உற்பத்திக்கு ஏற்ற ஆட்டினங்கள், தரமான ஆடுகளைத் தேர்வு செய்வது, தீவன மேலாண்மை, வறட்சிக் காலத்தில் தீவன பற்றாக்குறை நிலவும்போது மாற்றுத்தீவனங்களான பிஞ்சுகழிவு, புளியங்கொட்டை, பீர் பொட்டு போன்றவற்றை பயன்படுத்தும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை என்பன உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் சேர 73390-57073 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு மையத்தின் தலைவர் பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.