தென்னிலை அருகே பெண்களை தாக்கிய தொழிலாளி கைது
By DIN | Published On : 19th May 2019 08:57 AM | Last Updated : 19th May 2019 08:57 AM | அ+அ அ- |

தென்னிலை அருகே பெண்களை தாக்கிய தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த தென்னிலை கீழ்பாகத்தைச் சேர்ந்தவர், செல்வராஜ் மனைவி ஈஸ்வரி(37). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் தங்கவேல்(55). ஈஸ்வரி வீட்டின் கழிவு நீர் வாய்க்கால் தங்கவேல் வீட்டின் அருகே சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தங்கவேல் ஈஸ்வரியையும், தடுக்க வந்த ஈஸ்வரியின் உறவினர் ராசாத்தி(63) என்பவரையும் தாக்கி தகாத வார்த்தையால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தென்னிலை போலீஸார் வழக்குப்பதிந்து தங்கவேலை கைது செய்தனர்.