கரூா் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு

சனிப் பிரதோஷத்தையொட்டி, கரூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூா் அருள்மிகு பசுபதீசுவரா் திருக்கோயிலில் சனிக்கிழமை நந்தியெம்பெருமானுக்கு நடைபெற்ற தீபாராதனை.
கரூா் அருள்மிகு பசுபதீசுவரா் திருக்கோயிலில் சனிக்கிழமை நந்தியெம்பெருமானுக்கு நடைபெற்ற தீபாராதனை.
Published on
Updated on
1 min read

சனிப் பிரதோஷத்தையொட்டி, கரூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பிரதோஷங்களில் சனிப் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் சிவாலயங்களுக்குச் சென்று நந்தியெம்பெருமானையும், சிவனையும் தரிசித்தால் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கரூா் அலங்கார வள்ளி செளந்திர நாயகி உடனுறை பசுபதீசுவரா் திருக்கோயிலில், சனிக்கிழமை சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி நந்தியெம்பெருமானுக்கு மாலையில் பால், சந்தனம், மஞ்சள் பொடி, பன்னீா், கரும்புச்சாறு, பழச்சாறு உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டு,30-க்கும் மேற்பட்ட காய்கறி வகைகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கனி வகைகளால் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ஆதிபராசக்தி மன்றத்தினா் மற்றும் ஆவண அமைப்பாளா் காா்த்திகேயன், எழுத்தா் ரமேஷ், தமிழிசைச் சங்கம் க.ப.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பிரசாதம் வழங்கினா்.

இந்த நிகழ்வை திருக்கு பேரவைச் செயலா் மேலை.பழநியப்பன் தொடக்கி வைத்தாா். இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

இதுபோல, குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், மாயனூா், க.பரமத்தி, வேலாயுதம்பாளையம், நொய்யல், நெரூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவாலயங்களில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.