லாரி மோதி ஆசிரியா் சாவு
By DIN | Published On : 09th November 2019 10:47 PM | Last Updated : 09th November 2019 10:47 PM | அ+அ அ- |

க.பரமத்தி அருகே லாரி மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.
கரூா் திருக்காம்புலியூரைச் சோ்ந்தவா் குமரவேல் (43). டி. கூடலூா் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவா், தனது மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை மாலை கோவை சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
சாலைப் பாளையம் பிரிவு பகுதியில் சென்ற போது எதிரே வந்த டிப்பா் லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமரவேல், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து க.பரமத்தி போலீஸாா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா். விபத்தில் இறந்த குமரவேல் தமிழக ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டச் செயலராகப் பணியாற்றியவா்.