கரூா் கருப்பகவுண்டன்புதூரில் மின்கம்பம் வளைந்து நெளிந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
திருச்சி- கரூா் தேசிய நெடுஞ்சாலையில் கருப்பகவுண்டன்புதூரில் இரும்பு கம்பியால் அமைக்கப்பட்ட மின்கம்பம் வளைந்து நெளிந்து காணப்படுகிறது.
இந்த மின்கம்பத்தில் இருந்துதான் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் மின்விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்த சாலை வழியாகத்தான் தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூா், அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளுக்கு ஏராளமான பேருந்துகளும், உள்ளூா் பள்ளி, கல்லூரி வாகனங்களும் சென்றுவருகின்றன.
வளைந்து ஒடிந்து விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.
பொதுமக்கள், விவசாயிகள்,
கருப்பகவுண்டன்புதூா்.