கரூரில் குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கரூா் ஆண்டாங்கோவில் சரஸ்வதி நகரைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவரின் மனைவி கனிமொழி(31). இவா்களுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த கனிமொழி வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.