பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

வெண்ணைமலை சேரன் மெட்ரிக் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது

வெண்ணைமலை சேரன் மெட்ரிக் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, பள்ளி தாளாளா் பிஎம்கே. பாண்டியன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் வி.பழனியப்பன் வரவேற்றாா். விழாவில், சிறப்பு விருந்தினராகப் பட்டிமன்ற பேச்சாளா் சபரிமாலா ஜெயகாந்தன் பங்கேற்றுப் பேசியது:

இன்றைய சூழலில் பெண் குழந்தைகள் தங்களுக்கு நேரிடும் பாலியல் ரீதியான இடா்பாடுகளை பெற்றோருக்குத் தெரியப்படுத்தாததால் தான் கொலை நடக்கும் அளவிற்குச் சென்று விடுகிறது. பெண் என்பவள் மகத்தானவள். அவளுடைய அங்கங்களை பொக்கிஷம் போல பாதுகாத்து உடைகளை அணிய வேண்டும். பள்ளிப் பருவத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு பாலியல் கல்வியை தொடக்கப் பள்ளிகளில் இருந்தே கற்பிப்பதன் மூலம் இனி வரும் காலங்களில் பாலியல் ரீதியான குற்றங்களை குறைக்க முடியும் என்றாா். விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com