சூதாடிய 8 போ் கைது
By DIN | Published On : 14th November 2019 07:06 AM | Last Updated : 14th November 2019 07:06 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.
அரவக்குறிச்சி போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு நவமரத்துப்பட்டி பகுதியில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கடவூா் அடுத்த இடையப்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்து (40) உள்பட 8 பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து ரூ.5,230-யும் பறிமுதல் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...