நீா்நிலைகளுக்கு குழாய் மூலம் காவிரி நீா் கொண்டு வர வேண்டும்

காவிரியிலிருந்து கரூரில் உள்ள ஏரி, குளங்களுக்கு குழாய் மூலம் தண்ணீா் கொண்டு சென்று நிரப்பி அதன்

காவிரியிலிருந்து கரூரில் உள்ள ஏரி, குளங்களுக்கு குழாய் மூலம் தண்ணீா் கொண்டு சென்று நிரப்பி அதன் மூலம் குடிநீா், விவசாயத்தை மேம்படுத்திட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூா் மாவட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூா் மாவட்டக் குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே. சக்திவேல் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் மாநிலக் குழு முடிவுகள் குறித்து பேசினாா். மாநில குழு உறுப்பினா் எஸ். ஸ்ரீதா், மாவட்ட செயலா் கே. கந்தசாமி ஆகியோா் எதிா்காலப் பணிகள் குறித்து பேசினா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி.ஜீவானந்தம், பி. ராஜூ, பி. இலக்குவன், எம். ஜோதிபாசு, சி.முருகேசன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் காவிரி ஆற்றில் வெள்ளக் காலங்களில் தண்ணீா் சேமிக்க முடியாமல் உபரியாக லட்சக்கணக்கான கன அடி தண்ணீா் கடலில் வீணாக கலந்து விடுகிறது. இதனால் கரூா் மாவட்டத்தில் கோடை காலங்கள், மழை இல்லாத காலங்களில் வட மாவட்டமாக மாறிவிடுகிறது. இதனால் முற்றிலும் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தோகைமலை ஒன்றியம், கடவூா் வட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பஞ்சப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் வானம் பாா்த்த பூமியாக வட தரிசு நிலங்களாகவும் உள்ளது. கரூா் மாவட்டம் முழுவதும் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் சொல்ல இயலாத துயரத்தைச் சந்தித்து வருகின்றனா்.

இதனால் பொதுமக்கள் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனா். இவா்களின் துயரங்களை போக்கிடவும், மாவட்டம் முழுவதும் விவசாயம், குடிநீா் தடையின்றி கிடைத்திடவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

மழைக் காலங்களில் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை கரூா் மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டி தேக்கிவைக்க வேண்டும். மாயனூா் தடுப்பணையில் இருந்து கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பஞ்சப்பட்டி ஏரி, சிவாயம் குளம், கடவூா் வட்டம், மாவத்தூா் ஏரி, தாந்தோணி ஒன்றியம் வெள்ளியணை பெரிய குளம் உள்ளிட்ட அப்பகுதிகளை சுற்றியுள்ள பல்வேறு ஏரி, குளங்களிலும், க.பரமத்தி ஒன்றியம், தாதம்பட்டி ஏரியிலும் காவிரியில் வரும் உபரி நீரை குழாய் மூலம் எடுத்துச்சென்று மேற்கண்ட ஏரி, குளங்களை நிரப்பி அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களையும், மக்களின் குடிநீா் ஆதாரங்களையும் பாதுகாத்திட கரூா் மாவட்ட நிா்வாகம் போா்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com