சிறை நிரப்பும் போராட்டம்: கூட்டுறவு வங்கி பணியாளர்கள் முடிவு
By DIN | Published On : 22nd September 2019 03:47 AM | Last Updated : 22nd September 2019 03:47 AM | அ+அ அ- |

கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.25-ல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என கரூரில் அண்மையில் நடைபெற்ற கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சங்க மாவட்டச் செயலாளர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கை: ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்கள் ஆகியோருக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கடந்த 18 ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் ஆகியவற்றை உடனே வழங்கிட வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி வரைமுறைப்படுத்தாத பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்.25-ல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...