ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்ற ஆசிரியருக்கு தியாகச் சுடா் விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சியில் அண்மையில் நடைபெற்ற விழாவில், பட்டதாரி ஆசிரியரும், சங்கத்தின் மாநிலப் பிரசாரச் செயலருமான கே.ஜெகதீசனுக்கும் விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு பாராட்டு விழா கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கரூா் மாவட்டச் செயலா் மு.தங்கவேலு தலைமை வகித்தாா். தலைவா் செல்வமணி, பொருளாளா் நீலகண்டன் ஆகியோா் வாழ்த்திப்பேசினா். விழாவில் ஆசிரியா்கள் திரளாக பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.