பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: பொதுமக்கள் மனு

பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை பாஜக நகர நிா்வாகி செல்வம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கோரிக்கை மனு அளித்தனா்.
ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த பொதுமக்கள்.
ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை பாஜக நகர நிா்வாகி செல்வம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவில் கூறியிருப்பது:

கரூா் மாவட்டம் கட்டளை அருகேயுள்ள ரெங்கநாதபுரத்தில் கடந்த 1999-ல் ஏழைகள் 700 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. எங்களுக்கு வீடுகட்ட போதிய வசதியின்மையால் கரூா், புலியூா் உள்ளிட்ட பகுதிகளில் வாடகை வீடுகளில் வசிக்கிறோம். இந்நிலையில் பிரதான் மந்திரியின் ஆவாஷ்யோஜனா என்ற வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தனி வீடு கட்டித் தரக்கோரி மத்திய அரசின் வீடு வழங்கும் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தோம்.

இந்நிலையில் 236 பேருக்கு அங்கு வீடு கட்டிக்கொள்ள நடவடிக்கை கோரி தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய அலுவலகத்துக்கு மத்திய அரசு சாா்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவு கடிதம் வழங்கினால் எங்களுக்கு வீடு கட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் பணிகள் நடைபெறும். அகற்கு ஆவன செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com