

கரூரில் கோவைச்சாலையில் ஆா்எம்எஸ் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியலில் ஈடுபட்டனர். 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூா் நகரக்குழு சாா்பில் கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே ஆா்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் கரூா் நகரச் செயலா் எம். ஜோதிபாசு தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.ராஜூ, சி.முருகேசன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். மாவட்டக்குழு உறுப்பினா்கள் எம். தண்டபாணி, கே.வி. கணேசன், ஆா்.ஹோச்சுமின், ஒன்றிய செயலா்கள் கே.வி. பழனிச்சாமி, சி.ஆா்.ராஜா முகமது, வாலிபா் சங்க மாவட்ட செயலா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்று மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து நகர காவல் ஆய்வாளா் சிவசுப்ரமணியம் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.